Saturday 1 September 2012

வாலீஸ்வரர் கோவில் வரலாறு



திருச்சிற்றம்பலம்

அருள்மிகு சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர்  வாலீஸ்வரர் எனும் கபாலீஸ்வரர்  கோவில் வரலாறு

சுந்தரர்                                                                                                         
                            
சம்பத்தார் 


சேவூர்: 

              "கோ" என்றால் பசு, அதே போல் "சே" என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும் 
"மாட்டூர் அரவா" என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது.  மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம். 

சிறப்பு: 

                சோழர்களின் புகழ்பெற்ற அரசன் "கரிகாலன்" தான் இழந்த சோழநாட்டை சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.  

வாலீஸ்வரர் :

                                    இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக  இருக்கலாம் என்றும்  கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
                             வாலியும்,சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை எக்காலத்திலும் வென்றவன். இராவணனோ எமனை  வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி.  மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான். அவனை இருவரும் துரத்தி சென்ற   போது  வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட  குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும்  வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து "தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்" என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று  மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக்  கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.
                        வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு  ஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான், ஆனால் அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட ஹத்தி தோஷத்தை  நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம்   சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர் நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும்  ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும் அங்கு 1008 கலசம் வைத்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம்  அனைத்தும் நீங்கும் என்று அருளினார். அது போல வலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று  மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது ஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது  புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும்  மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும்  என்றும் உபதேசம் செய்தனர்.  அவ்வாறு  வாலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சான்று: கோவில் சிற்பங்கள் மற்றும் சேவூர் புராணம்
குறிப்பு: சேவூர் புராணம் 32 அத்தியாங்களை கொண்டது.

வாலி பூஜித்தல்
கபாலீஸ்வரர்
                                            மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவரை கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். அதுமட்டுமில்லாமல் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம்  திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறியலாம்.
வாலீஸ்வரர் எனும் கபாலீஸ்வரர்

சான்று :  திருகோவிலின் முந்தைய அமைப்பு 
நன்றி :  தவத்திரு சிவச்சலம் ஐயா அவர்கள் வரன்பாளையம் திருநாவுகரசு மடம், தாராபுரம்.


அறம் வளர்த்த நாயகி                                             


             சோழர்கள் குடியேற்றத்தின் காரணமாக அப்பகுதி வேகமாக வளர்சியுற்றது. ை என்னும் ையையில் இரந்து சோழர்கள் குடியேறியால் இப்பிக்கும் ை நாடு என்ரெயர் விளங்கிற்ற. ோழர்கின் மாலஆர்(த்ி) அன் அடிப்பையில் ஆர் ாடு என்று அழைக்கப்பட்டு.  அதன் உட்கிடத்தை நாடுகளாக வடபரிசார நாடு (அவினாசி), பழன நாடு (பெருமாநல்லூர்), மன்னி நாடு (அன்னூர்), கவைய நாடு (கோவில்பாளையம்), கோவங்க நாடு (கோவை), பேரூர் நாடு (பேரூர்என்று ஆறு சமஸ்தானங்கள் உருவாகின.  


இந்த ஆறு சமஸ்தானங்கள் சேர்ந்த பகுதி ஆற நாடு என்று அழைக்கப்பட்டு, பின்பு ஆரநாடு என்று அழைக்கப்பட்டது (ஆறை என்றால் கோட்டை என்று அர்த்தம்). இந்த ஆறை நாட்டின் தலைநகர் ிருமுருகன் பூண்டி மற்றும் செம்பியன் கிழானடி நல்லூர் (சேவூர்) ஆகும். ந்தியை சோழன் இம்முடி பட்டம் வணங்காமுடி கோ-நாட்டன்  வீர விக்கரம கரிகால சோழியாண்டார்  வம்சத்தார் ஆண்டு வந்தனர். சோழன் + ண்டார் சேர்ந்ததே சோழியாண்டார் ஆகும் இவர்கள் கங்கு நாட்டை முன்னூறஆண்டுகள் வீரோழன் என்றும் விக்கிரோழன் என்றும் மாறி மாறி பட்டேற்றஆண்டார்கள். ஆட்சியை இழந்திறீரிக்கிரோழியாண்டார் என்று பட்ேற்றுக்கொண்டார்கள். காஞ்சி நதியில்(நொய்யல்) வடக்கு நீர்பிடிப்புப் பகுதிகளே ஆறை நாடு ஆகும், இதுவே தற்பொழுது கோயம்புத்தூர் பீடபூமி எனப்படுகிறது.
ஆறைநாட்டு காணிப்பாடல்


சான்று: கலைமகள் பள்ளியில் உள்ள ஓலைசுவடிகள் 
நன்றி:   கலைவாணி M.A, M.Phill, Phd   
ஆறைநாட்டு காணிப்பட்டியல்


குறுப்பு நாட்டுடன் இணைந்த ஆறைநாடு


மிகுந்த வளத்துடன் மக்கள் வாழ்த்து வந்தார்கள், மிகுந்த வளத்தின் காரணமாக இங்கு வாழ்ந்த மக்கள் அதிக தான தர்மகளிலும், பூஜை விதிமுறைகளிலும்  மிகுந்த அறநெறியிலும் வாழ்ந்து வந்தனர். அச்சமயம் வேமன் என்னும் அரக்கன் அப்பகுதி மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இப்பகுதி ஆண்களை அறநெறி தவறி நடக்க பணித்தான், இதனால் பெண்கள் அனைவரும் இக்கோவில்  அம்மனிடம் மாங்கலிய பூஜை செய்து வேண்டி கொண்டனர், அதன் காரணமாக அம்மன் தனது கையில் இருந்த அஸ்திரத்தை ஏவி அந்த அரக்கனை தாமரை மலராக கையில் ஏந்தி கொண்டாள். இதன் காரணமாக அம்பாளுக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயர் ஏற்பட்டது. இப்பொழுதும்  அம்மன் கையில் தாமரை மலர் ஏந்தி நிற்பதை பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இங்கு மாங்கல்ய பூஜை ஆண்டு தோறும் மிக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது  

அறம்வளர்த்த நாயகி
  
சான்று : அம்மன் சிலை அமைப்பு மற்றும் சேவூர் புராணம்.

திங்கட்கிழமை வழிபாட்டின் சிறப்பு 


புதிய ஆர்டர்களை (orders) பெற்றுதரும் வாலீஸ்வரர்,

நமது சேவூர் சிவாலயத்தில் ஐந்து திங்கட்கிழமைகள் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்தால் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் செயல்படும் ஓரியண்டல் நூலகத்தில் சேவூர் புராணம் ஓலைச்சுவடி வடிவில் உள்ளது. அந்த சேவூர் புராணத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது.

அதில், முன்னொரு காலத்தில் ஒரு ஏழை தச்சன் வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு மிகவும் வேதனை அடைந்தார். அது சமயம் வியாபார நிமித்தமாக இவ்வூருக்கு வருகை புரிந்தார். (அந்த சமயம் ஆறைநாட்டில் சேவூர் மிக பெரிய ஊர்) அப்பொழுது வாலிஸ்வரரின்  மகிமை கேள்விப்பட்டு தொடர்ந்து ஐந்து  திங்கட்கிழமை வந்து வாலிஸ்வருக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்து  தன்னுடைய கஷ்டத்தை போக்குமாறு வேண்டினான் . அவ்வாறு ஐந்தாவது திங்கட்கிழமை கோவிலுக்கு வரும் பொழுது வாலீஸ்வரர் அந்தனர் வடிவில் கோவிலின் பின்புறம் வந்து தச்சனை மறித்து தான் ஒரு பிரம்மசாரி என்றும் தான் துறவு பூண்டு காசிக்கு செல்வதால் என்னிடம் உள்ள தானியங்களை அன்னபூரணிக்கு தானமாக அனுப்பவேண்டும் என்றும் அதனால் எனக்கு ஐந்து எருமை (மாட்டு) வண்டிகள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டான். அந்த காலகட்டங்களில் உழவுக்கு எருமைகளை பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் இப்பகுதியில் எருமை வண்டிகள் என்று சொல்லப்படுவதுண்டு. மிகவும் மகிழ்ச்சி அடைந்த தச்சன் ஒரு வார அவகாசத்தில் வண்டிகளை செய்துதருவதாக கூறினார்.உடனே அந்த ஐந்து எருமை வண்டிக்கு உண்டான தொகையை தச்சனிடம் கொடுத்து அனுப்பினார். பிறகு ஒரு வாரம் கழித்து வண்டிகளுடன் கோவிலுக்கு வந்த தச்சன் அந்த அந்தனரை ஊர் முழுவதும் தேடினான், ஆனால் அந்த அந்தனரை காண இயலவில்லை. அதன் காரணமாக ஊர் மக்களிடம் அவரை பற்றி விசாரித்தார் ஊர்மக்களோ அப்படி ஒரு அந்தனர் இந்த ஊரில் இல்லை என்று கூறினார்கள். அதன் பின்பு தனக்கு அருளியது வாலீஸ்வரர் என்றும் அவருடைய மகிமையை புரிந்துகொண்ட தச்சன் அன்றிலிருந்து திங்கட்கிழமை தவறாது வாலிஸ்வரரை வேண்ட தொடங்கினான். அதன் பிறகு அந்த தச்சன் செல்வ செழிப்போடு வாழ்ந்தான்.      


என்று சேவூர் புராணம் சொல்லுகிறது.  


குறிப்பு : திங்கட்கிழமை தோறும் வாலிஸ்வரரை வணங்க வருபவர்கள் வாலீஸ்வரர் சன்னதியை ஒரு முறை சுற்றி வருவதற்குள் அவர்களுடைய பிரதான வேண்டுதலை 108 முறை உச்சரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


நடராஜர் 

 நமது திருகோவிலில் ஆடல் பெற்ற தாண்டவம் அக்னிதாண்டவம் ஆகும்.  இத்திருகோவிலில் இறைவன் அக்னிதாண்டவம் ஆடியபொழுது  தாண்டவத்தின் உக்கிரத்தை கண்டு அஞ்சிய தேவர்களும்முனிவர்களும் சென்று ஒளிந்து கொண்ட இடமே திருப்புக்கொளியூர் (அவினாசிஆகும்அதன்பின் இறைவன் திருப்புக்கொளியூரில் எழுந்தருளி தேவர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜ பெருமான்

சான்று :  சேவூர் புராணம் மற்றும் - அவினாசி தல புராணம் 1971-ம் ஆண்டுபதிப்பு

ஸ்ரீசக்கரம்             


 இத்திருகோவிலில் சேவூர் சமஸ்தானத்தினர் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அணையா யாகங்கள் நடத்தி ஸ்ரீசக்கரயந்திரத்தை உயிர் பெற செய்ததாக கூறப்படுகிறதுஇந்தயந்திரத்தில் வரையப்பட்ட யந்திர அமைப்பை பயன்படுத்தி இன்று வரையிலும் அவ்வம்சத்தை சேர்ந்தவர்களால் பாம்புதேள் மற்றும் கொடிய விஷங்களில் இருந்து தங்களை காத்து கொள்கின்றனர்இந்தியாவில் அந்நியர்கள்  வருகையால் சேதம் அடைந்த கோவில்களில் இத்திருத்தலமும் ஒன்றாகும்அந்நியர்கள் வருகையின்போது கோவிலில் இருந்த ஸ்ரீசக்கரத்தை பாதுகாக்கும் பொருட்டு அந்த சக்கரம் சமஸ்தான கோட்டைக்கு மாற்றப்பட்டதுகோட்டையில்  சக்கரத்தை பாதுகாப்பது கடினம் என்று எண்ணிய சமஸ்தானம் அச்சமயம் பேரூர் சமஸ்தானம் மிக அடர்ந்த வனப்பகுதியிலிருந்த காரணத்தால் அங்குவைத்து பாதுகாப்பது என்று எண்ணி ஸ்ரீசக்கரம் பேரூர் சமஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறதுஸ்ரீசக்கரம் பேரூர் சென்ற பிறகு பேரூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் சீரும் சிறப்பும் பெற்று உலக புகழ் பெற்றதாக கூறப்படுகிறதுஅதன் பிறகு நாயக்கர்கள் வருகைஉடையார்கள் வருகைகாங்கயர்கள் (கொங்கர்வருகைக்கு பிறகு பேரூர் பகுதி (கோவைபெரிய நகரமாக உருவெடுத்தது.
சான்று சமஸ்தானத்தின் குலகுருக்களிடம் இருந்த ஓலை சுவடி.

வன்னிமரம்:-

                  இக்கோவிலின் தலவிருச்சம் வன்னிமரம் ஆகும். இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் பட்டையும் இலையையும் வீட்டில் வைத்தல் செல்வம் பெருகும் என்பது ஐதிகம்.

பெயர்காரணம்:-
                        ஒரு சமயம் விவசாய தொழில் மிகவும் நலிவடைந்திருந்தது. அப்பொழுது தென்னக பகுதியை ஆண்ட அரசர்கள் ஒன்றிணைந்து சிவபெருமானிடம் வேண்டி தம் நாட்டு மக்களுக்கு நல்வழி அருளுமாறு வணங்கினர். அதன் காரணமாக சிவபெருமானின் கட்டளை படி நந்தியம் பெருமாள் ஒரு கோ(பசு)வை படைக்கிறார். ஆனால் அந்த கோக்களை மக்களிடம் எவ்வாறு சேர்ப்பது என்று அறியாத நந்தியம் பெருமாள் சிவனிடம் வேண்ட சிவபெருமான் வள்ளல் குணமும் பால் உள்ளமும்கொண்ட ஒருவரை படைத்தது அவனுக்கு கோ - புத்திரன் என்று பெயர் சூட்டி கோ-வை மக்களுக்கு தானமாக கொடுக்கும் படி கட்டளை இட்டான். அவ்வாறு படைக்க பட்ட கோ-புத்திரன் ஆட்சி  செய்த பகுதியே ஆறைநாடு ஆகும். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கோ-புத்திரனிடம் பசுக்களை தானமாக பெற்று தன் மக்களுக்கு கொடுத்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மூவேந்தர்களால் கோ-புத்திரன் நாடு என்று போற்றப்பட்டது. மேலும் கோ-வை தானமாக வழங்கும் நாடு என்று அழைத்தார்கள். இதுவே காலப்போக்கில் கோயம்புத்தூர் என்றும் பிறகு கோவை என்றும் மருவி அழைக்கப்பட்டது. இதன் தலை நகரமாக விளங்கிய செம்பியன் கிழானடி நல்லூர் வீரபாண்டியனால் சேவூர் என்று மாற்றப்பட்டது.
சான்று : காசி புராணம்             
நன்றி : கலைவாணி M.A,M.Phil,Phd

கோ பூஜை மற்றும் கஜ பூஜை:- 

                                 கோ என்றால் பசு, கோ பூஜையின் சிறப்பு உலகறிந்த செய்தி  அதாவது ஒரு மனிதன் எவ்வளவு தோஷம் உள்ளவனாக இருந்தாலும் கோ பூஜை செய்வதன் மூலம் அவன் அனைத்து தோஷங்களில் இருந்து விடு படுகிறான். ராஜ ராஜா சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய  பொன்னால் ஆன பசுவை தானம் செய்தான் என்கிறது வரலாறு. அது மட்டும் இல்லாமல் நாம் கண்கூட பார்ப்பது கோவை மாவட்டம் (ஒருகிணைந்த திருப்பூர் உட்பட) ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் வாழ்வழிக்கும் நகரமாக வளர்ந்ததுக்கு காரணம் இந்த கோ-தானமே ஆகும். கோ-வை தானமாக அளிக்கும் கோவையை ஆண்டவர்கள் இக்கோவில் வாயிலாகவே கோ-வை தானமாக வழங்கியதாலே இக்கோவிலை தரிசிக்கும் ஒவொருவருக்கும் கோ-பூஜை செய்த பலன் கிட்டும், மேலும் அவர்களின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

                        கஜம் என்றால் யானை, பொதுவாக கஜ பூஜை என்பது அரசன் ஆவதற்கும் அரசு பதவிகளைப்  பெறுவதற்கும் செய்யப்படும் பூஜை. எவன் ஒருவன் கஜ பூஜை செய்கிறானோ அவனுக்கு பதவிகள் தேடி வரும் என்பது உண்மை, ஆனால் கிஸ்கிந்தாவில் தனது ஆட்சியை இழந்த வாலி இக்கோவிலை பூஜித்த பின்பே கிஸ்கிந்தாவில் ஆட்சியை தன் வசம் ஆக்கிக்  கொண்டான். வாலி முன்பு எவர் வந்தாலும் அவர்களின் பாதி சக்தி வாலிக்கு போய் விடும். அதன் காரணமாகவே ராமர் மறைதிருந்து வாலியை கொன்றதாக கம்பர் கூறுகிறார். அவ்வளவு சக்தி படைத்த வாலி தனது பலம் முழுவதையும் சேர்த்து இக்கோவிலின் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். இதை உணர்ந்த கரி கால சோழன் இக்கோவிலின் இறைவனை பூஜித்த பின்பே சோழ சாம்ராஜ்யத்தை கைப்பற்றினான். ஆகையால் எவன் ஒருவன் இக்கோவிலுக்கு வந்து சிவனை பூஜிக்கிறானோ அவனுக்கு கஜ பூஜை செய்த பலன் கிட்டும், அரச பதவிகள் தேடி வரும் என்பது உண்மை.

நன்றி: நாகப்பா M.A MPhill Phd(Astro) மைசூர்.

சேவூரில் கரிகால சோழன்

                          உறையூரை தலைநகரகாக கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னனனுக்கு சிங்களாதேவி, சியாமளாதேவி என்ற இரு தேவிமார்கள் இருந்தார்கள், ஒரு சமயம் உறையூர் பாண்டிய மன்னனின் தாக்குதலுக்கு உள்ளான போது மண் மாரியால் உறையூர் அழிக்கப்பட்டது. அப்பொழுது இருதேவிமார்களையும் சந்திர பட்டர், ராம பட்டர் என்று இருபிராமணர்கள் காப்பாற்றி கொங்கு நாடு அழைத்து செல்வார்கள். அப்பொழுது சிங்களாதேவி கர்ப்பமாக இருப்பார். கொங்கு நாட்டில் வைத்து இருவரும் பாதுகாக்க படுவார்கள். 



 அப்பொழுது சிங்களா தேவிக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்கும். அந்த ஆண் குழந்தை பதினாங்கு வருடங்கள் அங்கேயே வளர்ந்து போர் கலைகளை அனைத்தையும் கற்று தேர்ந்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை கைப்பற்றவேண்டி பாண்டியன் மீது போர் தொடுக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் சோழதேசத்தை கைப்பற்ற இயலவே இல்லை. அதுசமயம் தன்னை காப்பாற்றிய சந்திர பட்டர், மற்றும் ராம பட்டரிடம் வந்து உபதேசம் கேட்கிறான்.

வாலி என்பவன் சிறந்த சிவபக்தன் அவனின் எதிரில் யார் வந்தாலும் அவர்களின் பாதி பலம் வாலிக்கு வந்துவிட வேண்டும் என்று வரம் பெற்றவன். அதனால் அவனை யாராலும் வெல்ல முடியாமல் இருந்தது. அவ்வளவு பெரிய பலசாலியான வாலியே சூழ்ச்சியால் தான் இழந்த கிஸ்கிந்தா நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டி வசிஷ்டரிடம் உபதேசம் பெற்று அவினாசிக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ள சேவூர் என்னும் இடத்தில் 1008 கலசங்கள் வைத்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுகிறான். இதனை அறிந்த ராமபிரான் கூட வாலியை நேருக்கு நேராக நின்று எதிர்க்க முடியாமல் மறைதிருந்தே அம்பேய்தி அவனை கொல்லுவார். இதனால் ராமரால் கூட எதிர்க்க முடியாத மிக பெரிய பலசாலியான வாலினால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட சிவாலயமான சேவூர் சிவாலயத்தில் எதாவது ஒரு பெளர்ணமி அன்று 1008 கலசம் வைத்து ஹோமம் செய்து காரம் பசுவை கோவிலுக்கு தானமாக கொடுக்குமாறு உபதேசம் செய்தனர். அவர்களின் உபதேசம் பெற்ற சோழ இளவரசன் ஆடி மாதம் பெளர்ணமி அன்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலியில் 1008 கலச ஹோமம் செய்து கோவிலுக்கு காரம்பசுவை தானமாக வழங்கினான்.

அதன்பிறகு மீண்டும் உறையூர் மீது படையெடுத்து உறையூரை கைப்பற்றி கரிகால சோழன் என்று பட்டமெய்தி சோழ தேசத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அத்துடன் தனது ராஜ்ஜியம் திரும்ப கிடைக்க காரணமாக இருந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலை பெரியதாக கட்டி அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு தனி சன்னதியும் அமைத்து கொடுத்துள்ளான். அத்துடன் தனது ராஜ்ஜியத்தை திரும்ப பெற உதவியாக இருந்த சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு சிங்களாதேவியின் நினைவாக சிங்காநல்லூர் என்றும் ஊரையும், சியாமள தேவி நினைவாக சியாமளபுரம் என்ற ஊரையும் உருவாக்கி முறையே சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு தானமாக வழங்கினான்.

கோவை அருகே சிங்காநல்லூர் என்ற ஊரும், கோவைக்கும் திருப்பூருக்கு இடையே சியாமளாபுரம் என்று ஊரும் இன்று உள்ளது. ஆகையால் அரசியலில் புதியதாக பதிவு பெற நினைப்பவர்களும், இழந்து அரச பதிவிகளை பெற விரும்புபவர்களும் சேவூர் சென்று சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் தான் விரும்பிய அரச பதவி கிட்டும். இந்த செய்தி சோழன் பூர்வ பட்டையத்திலும் சேவூர் புராணத்திலும் இடம்பெற்றுள்ளது.   
 
இருகூர் செப்பேடு மற்றும் அவினாசி தேர்பட்டையம்

படத்தில் முதல் பட்டையம் ஸ்ரீமத் மார்கண்டேய பண்டித குருஸ்வாமிகள் - மருதமலை ஆதீனம் - இருகூர் மடம் அவர்களிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது,.,


கொங்கு மண்டல சதாகம்
 சோழ நள்ளாறு என்னும் நதி பாயும் அழகான பூமியில்
இருக்கும் அயிராவதம் என்னும் படித்துறை மற்றும் 5 இதழ்கள் கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் இருக்கும் அவிநாசி லிங்கர் கோவிலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செம்பியன்(சேவூர்) காணியின் அதிபதி. பைத்தலை குலத்தின் கோன்(தலைவன்) பல புதுமைகளை கண்ட சோழர்களாக வாழும் கொங்கு மண்டலம்.


ஆர் நாட்டார்  வணங்காமுடி இம்முடி வீரவிக்கிரம கரிகால சோழியாண்டான்
அன்றிலிருந்து இன்று வரை சேவூர் வாலீஸ்வரர் திருவாதிரை(ஆருத்ரா தரிசனம்) விழாவன்று அனைத்து சமஸ்தான பட்டக்காரர்கள், பாளையகா ரர்கள், நாட்டாமை மற்றும் ஜமீன்தார்கள் முன்னிலையில் சோழியாண்டார் வம்சாவழியினருக்கு பரிவட்டம் கட்டி முதல் தேங்காய் உடைப்பு, முதல் தரிசனம், முதல் விபூதி கொடுக்கப்பட்டு வருவதை இன்று வரை கண்கூடாக பார்க்கலாம்.


சான்று: சந்திர பட்டருக்கு எழுதி கொடுத்த ஓலை பட்டயம் மற்றும் கலைமகள் பள்ளியில் உள்ள இராம பத்திரர் பட்டயம். மேலும் இருகூர் மடத்தில் இருக்கு செப்பேடு மற்றும் பழங்கரை மடாதிபதியிடம் இருக்கும் அவினாசி தேர்பட்டையம்


அக்கசாலிஸ்வரர்:- 
                     
                          "அக்க" என்றால் தங்க நாணயங்கள், "அக்கசாலை" என்றால் தங்க நாணயங்கள் அச்சடிக்கும் இடம் என்பது பொருள் ஆகும். பழங்காலத்தில் சேவூரில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டது. அவ்வாறு நாணயங்கள் அச்சிடப்படும் சாலையில் பணிபுரிவர்கள் வழிபடுவதற்கு அக்கசாலை அருகே ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதுவே அக்கசாலிஸ்வரர் கோவில் ஆகும். ஆனால் இது திப்பு சுல்தான் வருகைக்கு பிறகு ஹனுமந்தராயன்  கோவிலாக மாற்றபட்டது மற்றும் இங்கு 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவை அனைத்திலும் அக்கசாலை ஈஸ்வரர் என்றே உள்ளது. இக்கோவில் சேவையம்பதி கோட்டை அருகே அமைந்துள்ளது(தற்போதைய கோட்டை காடு) அப்பொழுது இங்கு அச்சடிக்கப்படும் தங்க நாணயங்கள் வாலீஸ்வரர் திருக்கோவிலில் தான் பாதுகாக்கப்பட்டது. அவ்வாறு அங்கு இருக்கும் செல்வதை பாதுகாக்கும் காவல் தெய்வமாக பத்ரகாளி அம்மன்  சோழியாண்டாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. அத்துடன் பத்ரகாளி அம்மனின் கட்டளையின் படி நொய்யல் ஆற்றை    தடுத்து அணை கட்ட விக்ரம சோழியாண்டார் முயிற்சித்து வந்தார், ஆனால் பலமுறை முயற்சித்தும் அணை கட்ட இயலவில்லை அப்பொழுது சோழியாண்டார் பத்ரகாளி அம்மனை வேண்டி நிற்கும் பொழுது   வானில் அசராரீ வாக்காக கன்னிப்பெண் ஒருத்தியை பலி கொடுத்து அணையை கட்டி முடிக்கும்படி ஒலித்தது. அதன் காரணமாக விக்ரம சோழியாண்டார் தனது நல்லம்மாள் என்ற  மகளை   பத்ரகாளி அம்மனுக்கு பலி கொடுத்து நொய்யல் நதியின் குறுக்கே அணை போட்டு முடித்தார்.(இந்த அணை மங்கலம் அருகே உள்ளது)
                  
கொங்குமண்டல சதகம்
நல்லம்மாள் அணை
அணை போட்டு தடுத்த பின் அப்பகுதி மேலும் சிறப்புற்றது, மேலும் மேலே கூறப்பட்ட செய்யுளில் திருப்புக்கொளியூர் (அவினாசி) கோவிலை இவரே கட்டினார் என்பதையும் அறியலாம்.

பத்ரகாளி அம்மனின் அடுத்தாண்டு திருவிழாவின் பொழுது மீண்டும் தனக்கு நிறைமாத கர்ப்பிணியை பலிகேட்டது, இதனால் கோபமுற்ற விக்ரம சோழியாண்டார் திருவிழாவை நிறுத்தி அம்மன் சிலையை பிடுங்கி வாலி நதியில் போட்டார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் திருவிழா நடக்காமல் இருந்து வந்தது, பலர் மீண்டும் மீண்டும் விழாவை நடத்த  முயற்சி செய்தும்   முடியவில்லை. அப்பொழுது காஞ்சிபுரத்தில் இருந்து வந்த சித்தர் முத்துக்குமார சுவாமிகள் மூலமே மீண்டும் திருவிழா நடத்தப்பட்டது. சித்தர் முத்துக்குமார சுவாமிகள் இவ்வூருக்கு வரும் பொழுது பத்ராகாளி அம்மன்  கோவில் சிதைவடைந்து இருந்ததையும் அவர் கோவில் திருப்பணி செய்ய மைசூர் அரசரிடம் பொருள் உதவி பெற்றதையும் முத்துகுமாரர் செப்பு பட்டயம் மூலம் அறியலாம்.

சேவூர் வரைபடம்

சான்று:- கொங்கு மண்டல சாதக பாடல் 118 மற்றும் 191, அக்கசாலை ஈஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் மற்றும் முத்துகுமரா செப்பு பட்டயம், தொல்பொருள் துறையிடம் உள்ள பழைய சிலை.                


திருக்கோவில் சிதைக்கப்பட்டது:-

                  கி.பி 15-ம் நூற்றாண்டில் மராட்டியர்களால் ஆறை நாட்டு மக்களிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. மராட்டியர்கள் நாட்டினுள் நுழையாமல் தடுத்து சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூரில் போர் நடைபெற்றது. இப்போரில் ஆறை நாட்டு இளவரசன் சேனாதிபதி சோழியாண்டார் வீரமரணம் அடைந்தார். அதன் பிறகு மராட்டியர்கள் வாலீஸ்வரர் கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்தனர். அவர்களை எதிர்த்து போரிட்டு விக்ரம சோழியாண்டாரும் திருக்கோவிலின் முன்பு வீர மரணம் அடைந்தார், அப்பொழுது ஆறை நாடு முழுவதும் சூறையாடப்பட்டது. விக்ரம சோழியாண்டார் வீரமரணம் அடைந்த இடத்தில் அவர் நினைவாக ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அந்த லிங்கம் தனியார் நில பகுதிக்குள் இருந்த காரணத்தால் 30/06/2004 ஆம் ஆண்டு நடந்த குடமுழக்கின் பொழுது அந்த லிங்கம் அரச மரத்து விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்பொழுதும் அந்த லிங்கத்தை காணலாம். நமது கோவிலின்  ஐம் பொன் நடராஜர் சிலை மட்டும் காப்பாற்றும் பொருட்டு சிலையை திருகோவிலின் கிணற்றில் போடப்பட்டது. கிணற்றில் போட்ட சிலையின் பிரபாவலையம் உடைந்து அது திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதையும் இப்பொழுதும் காணலாம். படைவீரர்கள் அனைவரும் நமது கோவிலை சுற்றியே கவனம் செலுத்தியதால்   அவினாசி கோவில்  நடராஜர் சிலை மராட்டியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது( அவினாசியில் தற்போது உள்ள நடராஜர் சிலை  வெள்ளை தம்புரான் மடத்தில் இருந்த சிலை) அதை தொடர்ந்து திப்பு சுல்தானால் சேவூர் கோட்டை முழுவதும் அழிக்கப்பட்டது.
விக்கரம் சோழியாண்டார்

முதலாம் சேவூர் போர் - கி.பி.953

                            மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டியர்களுக்கு தங்கள் பாண்டிய அரசுக்கு ஒரு இரண்டாம் தலைநகரம் வேண்டும் என்ற அவா எழுந்தது. அத்துடன் இரண்டாம் தலைநகர் இருக்கும் இடம் மிகவும் வளம் மிக்க பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டனர். பாண்டியர்களின் எண்ணங்கள் முழுவதும் கொங்கு நாட்டின் மேல் இருந்த காரணத்தினால், அவர்களின் இரண்டாம் தலைநகரம் கொங்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். இதன் காரணமாக மூன்றாம் ராஜ சிம்ம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் கி.பி 953-ல் சோழர்களுடன்  சேவூரில் போர் தொடுத்தான், இதுவே முதலாம் சேவூர் போர் ஆகும். இப்போரில் வெற்றி பெற்ற பாண்டியன் " தான் ஒரு சோழனை கொன்றதாகவும், அச்சோழனின் தலையை போர்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும்" பெருமை கொண்டான். "சோழன் தலைக் கொண்ட வீர பாண்டியன்" என்ற விருது பெயரும் சூட்டி கொண்டான் என்றும் திருநெல்வேலி கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கே சோழன் பெயர் விவரம் இல்லாமல் கூறியதால் அது ஒரு சோழ அரசனாக இருக்க முடியாது என்றும், அவன் கொங்கு சோழர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். வீர பாண்டியன் சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்த காரணத்தினால் இந்த ஊரின் பெயரை சேவூர் என்று மாற்றினான். அத்துடன் தன் தலைநகரான மதுரையில் இருக்கும் அழகர் பெருமாளை தனது இரண்டாம் தலைநகர் என்று எண்ணிய சேவூரிலும் எழுந்தருள செய்து  திருகோவிலையும் கட்டி முடித்தான். அழகர் பெருமாள் கோவில் சேவூர் காவல் நிலையம் அருகில் உள்ளது. இது திப்பு சுல்தான் படையெடுப்புக்கு பிறகு கல்யாண வெங்கட்ராமன் பெருமாள் என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் சேவூர் போர் - கி.பி. 962

                    இதுவே முதன் முதலாக இலங்கை சிங்களருக்கு எதிரான போருக்கு வித்திட்டதாகும் "சோழன் முடித்தலை கொண்டவன்" என்று பெருமையடித்துக்கொண்ட வீரபாண்டியனை விழ்த்தி பாண்டிய நாட்டை கைப்பற்ற சுந்தர சோழன் பேராவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றி கண்ட அதே களத்திலேயே சோழன் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர் போர் என்கிறோம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் கி.பி.962 நடைபெற்றதாகவும், இப்போர் சோழர்களை இலங்கைப்படை எழுச்சிக்கு துண்டிற்று. அதாவது இலங்கை சிங்கள அரசன் நான்காம் மயிந்தன்(மகேந்திர) சேவூர் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய சிங்கள படையை அனுப்பியிருந்தான், இதன் காரணமாக சிங்களருக்கு எதிராக சோழர்கள் இலங்கை மீது  தொடுத்த போரே முதலாம் இலங்கை போராகும். இரண்டாம் சேவூர் போரில் பாண்டியன் தோல்வி அடைந்து சோழர் பெரும் வெற்றி பெற்றனர், பாண்டிய நாடும் சோழர்களின் கைபட்டது. இதன் பின்  கி.பி  -966 நடத்த போரில் வீர பாண்டியன் கொல்லப்பட்டன், முன் அவன் சோழர் தலையை வெட்டியதாக விருது கூறியது போல இப்பொது அவன் தலையை வெட்டி சோழர் விருது பட்டம் பூண்டனர். " வீரபாண்டியன் முடித்தலை கொண்ட கொப்பர கேசரிவர்மன்" என்று பட்டம் பூண்டனார். சோழர்கள் வெற்றி பெறாமல் இருந்துருந்தால் சிங்களர்கள் தமிழகத்திலும் குடியேறி உரிமை கொண்டாடியிருப்பார்கள்.        

சான்று:  அலமேலு நிலையத்தால்  1971 ஆம் ஆண்டு வெளியீடு செய்யபட்ட "தென்னாட்டு போர்களங்கள்"
நன்றி: பண்மொழி புலவர் கா. அப்பாத்துரை M.A(Tamil),M.A(English), L.T(Hindhi)


கல்வெட்டுகள்:-

                          நமது திருக்கோவிலில் 100-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்திய தொல்லியல் துறையால் படி எடுக்க பட்டு மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றின் நீளம் கருதி சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டு உள்ளேன். அதில் முக்கியமாக  படி என்:- 34 யில் திருப்பூர் மற்றும்  படி என்:- 39 யில் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் என்னும் ஊர் இக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டதை காணலாம்.

படி என் 32:-
                   செய்தி: பாண்டிய மண்டலத்து முட்டநாட்டு மாத்தூர் வியாபாரி  சொக்கன் பெருமாள் மகன் பெருங்கருணையாளன் சேவூர் திரு கபாலிச்சுரமுடையார் கோயிலில் சுப்பிரமணியரை எழுந்தருளுவித்து கோவிலும் கட்டி அமுதுபடி சந்தியா தீபம், பூசனைக்குரிய தூபதீபம் ஆகிய மரியதைகளுக்காக வராகன் புள்ளிக் குளிகைப்பணம் முன்னூற்றிருபது ஸ்ரீ பண்டாரத்தில் ஒடுக்கினான்.
ஆண்டு: கி.பி 1268
இடம் : சிவன் கோவில் மேற்கு சுவரில்

படி என் 33:-
                       செய்தி: பூலுவ ஊரார் செய்த ஒரு தானத்தை குறிப்பிடுகிறது
ஆண்டு: கி.பி 1211
இடம்: கோவில் பிரகாரத்தின் மேற்கு சுவரில்

படி என் 34:-
                        செய்தி: கோனேரின்மை கொண்டான்(அரசர்) வடபரிசார நாட்டு அரைசூரானகுல-தீபநல்லுரை(திருப்பூர்) கபாலிஸ்வரர்க்கு தேவதானமாக வழங்கினான். இவ்வூர் நொய்யல் ஆற்று கரையில் வடக்கிலிருந்து அவ்வூற்குரிய நஞ்சை, புஞ்சை வரிகள் இக்கோவிலுக்கு உரியன ஆகும்.
ஆண்டு: குறிக்கப்படவில்லை
இடம்: கோவில் முன் மண்டப வடக்கு சுவர்

படி என் 35:
                          செய்தி: யாதவரில் மதுராந்தகன் மும்முடி சோழன் கபாலிஸ்வரருக்கு சந்தியா தீபம் ஏற்ற  முதலாக வைத்த ஒரு கழஞ்சு பொன்னை இக்கோவில் கசுவ கோத்திர சிவப்பிரமணன் மழுவன் பட்டன் மகன் சித்திர மொழி பட்டன் பெற்றுக்கொண்டு அதன் வட்டிக்கு சந்தியா தீபம் ஏற்றினான் .
ஆண்டு: கி.பி 1151
இடம்: தட்சிணா மூர்த்தி கோவில் அருகில்

படி என் 36:
                                   செய்தி: சேவூரான செம்பியன் கிழானடி நல்லூரில் வாழும் தட்டாரில் சிறுக்கூத்தன் மாறனான மன்றுள் ஆடவன் செய்த தானம் இந்நிலைக்கல்
ஆண்டு: இல்லை
இடம்:- அம்மன் கோவிலுக்கு செல்லும் நிலைக் காலில் வழியில் உள்ளது.

படி என் 37:
                                    செய்தி: வீர ராசேந்திரனின் பட்டத்தரசி வானவன் முக்கோற்கிழானடிகளின் பெண்டுகளில் அறையன் வல்லி என்பவர் கபாலிஸ்வரருக்கு சந்தியா தீபமொன்று ஏற்ற  ஒரு கழஞ்சு பொன் முதலாக வைத்தது.
ஆண்டு: கி.பி 1227
இடம்: சிவன் கோவில் அர்த்த மண்டப கிழக்குசுவரில் உள்ளது

படி என் 38:
                              செய்தி: வடபரிசார நாட்டு வெள்ள நாட்டார், மற்றும் புலுவ நாட்டார் என்ற இரு சபையினரும் வழங்கிய தானம் குறித்தது.
ஆண்டு: கி.பி 1278
இடம்: சிவன்  கோவில் மகாமண்டப ஜகதியில் உள்ளது.

படி என் 39:
                                 செய்தி: கோனேரின்மை கொண்டான் திரு கபாலிச்சுரமுடையார் கோவில் அறப்பெருஞ் செல்வியாருக்கு அமுதுபடி பூச்சுப்படிக்கும் முப்பத்திரண்டு அறம் வளர்க்கவும் உக்கிரம் என்னும் வீரசோழ நல்லுரை(சத்தி-உக்கரம்) ஈடாக வழங்கினான. இவ்வூரின் நான்கு எல்லைக்குட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களால் வரும் பல்வேறு வரிகளும் இக்கோவிலுக்கு உரியது.
ஆண்டு: இல்லை
இடம்: அறப்பெருஞ்ச்செல்வி கோவில் வடக்கு குமுதத்தில் உள்ளது.

படி என் 40: 
                           செய்தி: வேறுநாடுகளில் எங்கும் இல்லாது கொங்கு மண்டலத்தில் வடபரிசார நாடு முதலாகிய ஏழு நாடுகளில் மட்டும் கைக்கோளர் செலுத்தும் சூளைத்திறை என்ற கட்டளை இரண்டு ஆண்டுகளாக  நடைமுறையில் உள்ளது. இவ்வாண்டு முதல் இச்ச சூளைத்திறைக் கட்டளை நீக்கப்படுகிறது.
ஆண்டு: கி.பி 1509
இடம்: சிவன் கோவில் மகாமண்டபத்தின் தேன்சுவரில் உள்ளது.

படி என் 41: 
                                         செய்தி: திருபுவன சக்ரவர்த்தி அறப்பெருஞ்செல்வியர் கோவிலின் பல்வேறு அறங்களுக்கு முதலாக இறைபரவு முதலிய பல வரிகளை நீர்வார்த்து கொடுத்தான், கல்வெட்டு சிதைந்துள்ளது.
ஆண்டு: இல்லை
இடம்: சிவன்   மற்றும் அம்மன் கோவிலுக்கு இடையே உள்ள சுவரின் வடபக்கம்.

படி என் 42:
                              செய்தி: குலோத்துங்கன் ஆட்சிகாலத்தில் வீற்றிருந்தான் புகலியும் மற்றொருவனும் இரண்டு தீபமேற்ற  ஆணையாச்சி ஸ்ரீயாக்கி பழஞ்சலாகை வழங்க சிவபிராமணன் நாளும் இவ்விளக்கேற்றுவானாக
ஆண்டு: கி.பி 1162
இடம்: சிவன் கோவில் அர்த்த மண்டப வடக்கு குமுதம்

நன்றி: முனைவர் மா.கணேசன், M.A, P.D, Phd, தமிழ் பேராசிரியர்(ஓய்வு), கோவை கலை கல்லூரி.

முனைவர் ஐயா அவர்களுக்கு சேவூர் மக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்திலேயே சேவூர் சுற்று பகுதியில் மட்டுமே அதிக கல்வெட்டுகள் காணப்படுகிறது. இவை அனைத்தையும் தனது சொந்த செலவில் படி எடுத்து பாதுகாத்து புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார், இதன் முலம் சேவூரின் முழு வரலாற்றையும் அறிய முடிகிறது. ஐயா அவர்களின் பணிக்கு எங்களின் கோடான கோடி நன்றிகள்.
               
தேடல் தொடரும் ............ இங்கு கிளிக் செய்யவும் Sevur Temple Video



கொங்குச் சோழர்களின் ஆட்சியில் மக்களின் அன்றாடத் தேவைக்கு உதவிட நாணயங்கள் பல உருவாக்கப்பட்டது. ஆனையச்சு, சீயக்கி, வராகன், கழஞ்சு, மற்றும் அச்சு ஆகியவை இவ்வாறு உருவாக்கப்பட்ட நாணயங்கள் ஆகும். இவை அனைத்தும் சேவூரில் அச்சடிக்கப்பட்டது. மேலும் சேவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த கொங்கு சோழர்களில் மிக முக்கியமானவர்கள் சிலரை மட்டும் கிழே குறிப்பிட்டு உள்ளேன். இவர்கள் ஆண்ட காலக்கணக்கு விவரம் நிச்சயமாக உறுதிப்படுத்தபட்டு கொங்கு நாட்டின் சிறந்த மன்னர்களாக இவர்கள் திகழ்ந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்கள் பரகேசரி, ராஜகேசரி போன்ற விருதுகள் கொண்டவர்கள். இவர்களுடைய ஆட்சி கொங்கு நாட்டு எல்லைகளைத்  தாண்டிக்கூட நடைபெற்று இருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளர் கொள்கை. எனேன்றால் இவர்களை பற்றி 29 கல்வெட்டுகள் கொங்கு நாட்டு எல்லை தாண்டியும் காணபடுகிறது. இவற்றில் கூறப்படும் செய்திகள் இவர்கள் புகழையும் திறமையையும் வெகுவாக சிறப்பித்துக் கூறுவதுதான் ஆராய்ச்சியாளர்களின் இக்கொள்கைக்கு ஆதரமாக உள்ளது.